Vivekanandar-27102015
இந்து மதத்தின் பெருமையை உலகறிய செய்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் 153-ஆவது ஆண்டு விழா தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையிலும் விவேகானந்தர் 153வது விழாவை ஒட்டி இன்று முதல் 3 நாள்களுக்கு ரத யாத்திரை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
சென்னை அம்பத்தூர் பானுநகரில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை 9 மணிக்கு ரத யாத்திரை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 30 இடங்களில் சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டம் தொடக்க விழா, நூலகங்கள் திறப்பு விழா, 42 இடங்களில் மரக்கன்றுகள் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த மூன்று நாட்களில் நடைபெறவுள்ளன.

இந்த ரதயாத்திரையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பரமசுகானந்தர், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தைச் சேர்ந்த சுவாமி ஹரிவிரதானந்தர், காஞ்சிபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த தர்மகரானந்தர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவை ராமகிருஷ்ண வித்யாலயம், காஞ்சிபுரம் ஸ்ரீராம கிருஷ்ண மடம், அம்பத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆசிரமம் உள்பட அம்பத்தூர், ஆவடி மண்டலங்களில் உள்ள பள்ளிகள், கோயில்கள், அறக்கட்டளைகள் உள்பட 42 நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன.
English summary-Swami Vivekananda’s 153rd Birth Anniversary special yatra.