அவ்வப்போது புதுப்புது பாலிசிகளை அறிமுகப்படுத்தி வரும் எல்.ஐ.சி. தற்போது குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுக்காக ‘ஜீவன் தருண்’ என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த புதிய பாலிசி குறித்து நேற்று சென்னையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: “மக்கள் நலனில் அக்கறையுடன் புது, புது காப்பீட்டு திட்டங்களை எல்.ஐ.சி. அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகளின் எதிர்கால கல்வி, திருமணம் போன்ற தேவைகளை கருத்தில்கொண்டு ‘ஜீவன் தருண்’ என்ற புதிய காப்பீடு திட்டத்தை எல்.ஐ.சி. குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது என்று கூறினார்.

இந்த புதிய பாலிசி திட்டத்தில் 90 நாள் குழந்தைகள் முதல் 12 வயது நிரம்பிய குழந்தைகள் வரை சேரலாம் என்றும் இதன் காப்பீட்டு காலம் குழந்தையின் வயது 25 அடையும் வரை அமலில் இருக்கும் என்றும் கூறிய அவர், இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.75 ஆயிரம் என்றும் அதிகபட்ச தொகைக்கு உச்சவரம்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

ஓராண்டு, அரையாண்டு, காலாண்டு என மூன்று தவணை முறையில் பிரீயம் தொகையை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய சித்தார்த்தன், இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களாக ‘குழந்தையின் வயது 20 அடையும் வரை மட்டுமே பிரீமியம் தொகை செலுத்தினால் போதும். குழந்தையின் 21 வயதில் பணம் தேவைப்படுகிறது என்றால் 5 சதவீதம், 10 சதவீதம், 15 சதவீதம் என 5 தவணைகளில் காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம். குழந்தையின் 25 வயது நிறைவு அடைந்தவுடன் மொத்தமாக காப்பீட்டு தொகையை முதிர்வு, வாழ்வுகால பயன்களுடன் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.

English Summary: LIC introduced new polices for Children.