தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 4,362 பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு நான்கே நாட்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இளநிலை உதவியாளர்கள் பணிக்கு நியமனம் செய்ய இருப்பவர்களுக்கு போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் இந்த தேர்வுகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலேயே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன என்றும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் சென்று இந்த மையங்களிலேயே விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று கூறிய அதிகாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மே 6 என்றும் அறிவித்துள்ளனர். இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வக உதவியாளர் பணி நியமனம் அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறுகிறது என்றும் இந்த பணிக்காக நடைபெறும் போட்டித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 1:5 என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Lab Assistant Vacancy, more than 2 lakh applications were applied within 4 days of announcement.