பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 6-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம், பிராட்வே பாரதி அரசு மகளிர் கல்லூரி, புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய 4 மையங்களில் விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையில் விண்ணப்பம் விற்பனை செய்ய தொடங்கிய முதல் நாளே 58 ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் விற்பனையாகியது என்றும், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 13,545 விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன. தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 510 விண்ணப்பங்கள் விற்பனையாகி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத் தரியராஜ் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விண்ணப்பங்கள் விற்பனை நடைபெறவில்லை. ஆனால் இன்று வழக்கம் போல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 2ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Nearly 1.30 lakhs applications were sold out in four days for Anna University Engineering Counselling in this Year.