தமிழகத்தில் மொத்தம் 3.56 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ நேற்று நடைபெற்ற மாவட்ட வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

மேலும் இதுவரை 11 லட்சத்து 6 ஆயிரத்து 453 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய குடும்ப அட்டைகள் கோரி பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 60 நாள்களுக்குள் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக குறைதீர் முகாம்கள் நடத்தப்படுவதாகவும் இங்கு வழங்கப்படும் குறை தீர்க்கும் மனுக்கள் மீது அன்றே நடவடிக்கை எடுத்து தீர்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

நுகர்வோர் வாங்கும் பொருள்களின் தரம் குறித்த புகார்களை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும், மேலும் 72999 98002, 86800 18002, 86800 28003 என்ற முன்று செல்போன்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் புகார்களை அனுப்பலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், உணவுத் துறைச் செயலாளர் முகம்மது நசிமுத்தின், ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

English Summary : New ration card in 60 days