இந்திய அஞ்சல்துறை புதியதாக அறிமுகப்படுத்திய ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இம்மாதம் 22 மற்றும் 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் செயல்படும் என்றும், இந்த நாட்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவகங்களை அணுகலாம் என்றும் சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இந்த ஆண்டிற்குள் 1 கோடி சேமிப்பு கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதால் விரைவில் இலக்கை அடைந்து விடுவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர தினமும் ஏராளமானோர் வருவதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை நகர மண்டலத்திற்கு உள்பட்ட 20 தலைமை அஞ்சலகங்கள், 55 துணை அஞ்சலகங்கள் ஆகியவை மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என்றும்  இந்த திட்டம் குறித்து கூடுதல் விபரங்கள் பெற 94430 48028 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியுள்ளார்.

English Summary : The new facility will provide a wealth daughter of the Post Office Savings Scheme