pan-card2116வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க இனி பான் கார்டு தேவையில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் வங்கிகளில் முதலீடு செய்தல், குறிப்பிட்ட கால வைப்புத்தொகை வைத்தல் ஆகியவைகளுக்கு ஏற்கனவே உள்ள நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கும் அதிகமாக பணபரிவர்த்தனை செய்யும்போது பான்கார்டு எண்ணை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கிகளில் புதிய சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு வர்த்தக விவகாரங்களில் பான் காடு அவசியம் குறித்த சட்டப்பிரிவில் சில திருத்தங்களை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி வங்கிக்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு பான் கார்டு இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

மேலும் பான் கார்டு இல்லாதவர்கள் வங்கிகளில் தவறான தகவல் அளித்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary:No Need to PanCard for start a Bank Savings Account. Income tax declaration .