சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் இன்றும் நாளையும் ரஷிய கல்விக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை ரஷ்ய பல்கலைக்கழகங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனத்துடன் (ஸ்டடி அப்ராட்) இணைந்து ரஷிய கலாசார மையம், ஏற்பாடு செய்துள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். மேலும், இவ்வருடம் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழுடன்  நேரில் வந்தால் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் நேரடியாக சேர்க்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ரஷியாவின் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம்., கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம், ட்வர் மாநில மருத்துவ அகாடமி, ரஷியன் இன்டர்நேஷனல் ஒலிம்பிக் பல்கலைக்கழகம் உள்பட 9 ரஷிய அரசு முன்னணி பல்கலைக்கழகங்கள் கலந்து கொள்கின்றன.  இந்தப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், இந்தியமாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பொறியியல், விளையாட்டு நிர்வாகம், ஏவியேஷன், ஏரோஸ்பேஸ், நியுக்ளியர் பவர் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் இளநிலை, முதுநிலைப் படிப்புக்கான சேர்க்கைக் கடிதத்தை மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 044-24988215, 9282221221 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

English Summary: Russian Educational Exhibition is going to start in Chennai.