பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும். செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் பல்வலி, ஈறு வீக்கம், பல்லில் ரத்த கசிவு, பல் சொத்தை வராது.

துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

வாழைப்பூவை வாரம் 1 முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இருவேளை குழந்தைகளுகக்கு கொடுத்து வர கண் சூடு தணியும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

1 thought on “இயற்கை முறையில் பயனுள்ள சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *