ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே அவ்வப்போது சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரையில் இருந்து வருகிற ஜூலை 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06020), அன்று மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06019), அதே நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு மதுரையை சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 1-ந்தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06001), மறுநாளில் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06002), மறுநாளில் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
English Summary: Special trains between Chennai-Madurai. Southern Railway