பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை மட்டுமே தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்து பல வெற்றி படங்களை இயக்கிய ஜெயம் ராஜா முதன்முதலாக சொந்தமாக ஸ்கிரிப்ட் எழுதி சமீபத்தில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. எனவே இதுவரை ‘ரீமேக் ராஜா’ என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருந்த இவர் இனிமேல் ‘தனி ஒருவன்’ ராஜா என்ற பெயரை பெற்றுள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பெயரை அவர் அடுத்து வரும் படங்களிலும் தக்க வைத்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் ரீமேக் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை அவர் ரீமேக் செய்வது அவருடைய ‘தனி ஒருவன்’ திரைப்படத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

தனி ஒருவன்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விருப்பம் கொண்டதாகவும், ஜெயம் ரவியின் கேரக்டரில் சல்மான்கானும், அரவிந்தசாமி கேரக்டரில் அபிஷேக்பச்சனும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயம் ராஜா, சல்மான்கான் அனுமதித்தால் ‘தனி ஒருவன்’ திரைப்படத்தை இந்தியில் நானே இந்தியில் இயக்க தயார் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ரிலீஸான ‘தனி ஒருவன்’ படம் நல்ல வசூலை கொடுத்துள்ளதாகவும், இன்று ‘பாயும் புலி’, ‘சவாலே சமாளி’ உள்பட சில படங்கள் ரிலீஸானாலும் தனி ஒருவன்’ படம் தொடர்ந்து பெரும்பாலான தியேட்டர்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

English Summary : Thani oruvan director Jayam Raja once again decided to take remake film. But this time its his own film with Salman khan and Abhishek bachchan in Bollywood.