trsin1402குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரவு நேரத்தில் படுக்கை விரிப்பு இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கும் இந்த வசதி கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தபப்ட்டது. இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு 2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 கட்டணமும், ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் பெற ரூ.250 செலுத்த வேண்டும். இவற்றை பயணத்துக்கு பின்னர் பயணிகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இவை தவிர மீதமுள்ள பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் படுக்கை விரிப்புகளும், போர்வைகளும் மிகவும் அழுக்காக சுகாதாரம் இன்றி இருப்பதால் பல புகார்கள் ரெயில்வே துறை அதிகாரிகள் வந்திருந்த நிலையில், பயணிகளின் மனக்குறையை போக்கு ரயில்வே அதிகாரிகள் புதிய முறை ஒன்றை கடைபிடிக்கவுள்ளது. இந்தப் போர்வைகள் மாதமொரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோதான் துவைக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் தினந்தோறும் துவைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் முதல்கட்டமாக எளிதில் துவைக்கும் வகையிலான படுக்கை விரிப்புகளையும், போர்வைகளையும் வாங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், இந்த எடைகுறைவான துணிகளை தினசரி துவைத்தாலும் நைந்துப்போகாத நவீனவகை படுக்கை விரிப்புகளையும், போர்வைகளையும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கழகம் ரெயில்வே துறைக்கு பரிந்துரைத்துள்ளது.

விரைவில் சோதனை அடிப்படையில் இந்த புதிய படுக்கை விரிப்புகளும், போர்வைகளும் சில முக்கிய ரெயில்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இதுகுறித்து பயணிகளிடம் கருத்துக்கணிப்பு எடுத்து பின்னர்  நாட்டில் ஓடும் அனைத்து ரெயில்களிலும் நடைமுறைப்படுத்தவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பயணிகளின் ஆலோசனையின்படி, இந்த படுக்கை விரிப்புகள் வெண்மையாக இல்லாமல் பல்வேறு நிறங்களில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அன்றாட பயன்பாட்டுக்குப் பின்னர் இவற்றை துவைத்து சுத்தப்படுத்துவதற்காக மேலும் பல ரெயில் நிலையங்களில் நவீனவகை லாண்டரிகளை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

English Summary: The new system will be offered to passengers on the railroad bed sheets daily rinse.