தொழில்நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கூகுள் நிறுவனத்தின் சார்பு இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. திரைப்படங்கள், பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையசேவை திடீரென முடங்கியதால், பலகோடி பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இணையதளம் பக்கத்தில் சர்வர் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டுள்ளதாகவும் உயர் தொழில்நுட்பக் குழுவினர் அதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் யூ டியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகு யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.