income taxஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தினமாக வருமான வரித்துறை அறிவித்துள்ள நிலையில் இன்று வருமான வரி கட்ட கடைசி தினம் என்றும் இன்று மாலைக்குள் வருமான வரி செலுத்தாதவர்கள் தங்களுக்குரிய வரிகளை செலுத்தி நடவடிக்கையில் இருந்து தப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி தினமாக உள்ளதால், தாக்கல் செய்யாதவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013-14-ம் நிதியாண்டு மற்றும் 2014-15 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை இம்மாதம் 31-ம் தேதிக்குள் அதாவது இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதுகுறித்து, வருமான வரி துறை அதிகாரி ஒருவர் கூறியபோது, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்படி வருமானவரித் துறை அலுவலகத்தில் இருந்து 4 லட்சம் பேருக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு வரி செலுத்துபவர்களிடம் இருந்து உரிய பதில் வரவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

எனவே வருமான வரி வரம்புக்கு உட்பட்டவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு கடுமையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் முறையாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது ஒன்றே தேவையற்ற சட்ட நடவடிக்கைகள், மன உளைச்சலில் இருந்து தப்பிக்க ஒரே வழி’’ என்று கூறியுள்ளார்.

English summary : Today is the last day to pay the income tax.