maedical-college
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த கவுன்சிலிங் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 585 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற 4ஆம் நாள் கவுன்சிலிங்கில்  646 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் 599 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள கவுன்சிலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 125 எம்.பி.பி.எஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 180 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 33 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 338 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 261 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். கல்லூரியில் சேருவதற்கான அனுமதி கடிதத்தை வழங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த பழைய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.

இதுவரை நான்கு நாட்கள் கவுன்சிலிங் முடிவடைந்த நிலையில்  20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்.பி.பி.எஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 253 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 36 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 212 எம்.பி.பி.எஸ் இடங்களும் நிரம்பி விட்டன. அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 26 எம்.பி.பி.எஸ் இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 16 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன. நாளையுடன் கவுன்சிலிங் முடிவடைவதால், நாளை மாலை எத்தனை எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன என்கிற இறுதி விபரம் தெரிய வரும்.

 

English Summary : Tomorrow the results of medical counseling . 585 seats in Government Medical Colleges.