மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் அடுத்ததாக, “வா தமிழா வா” என்கிற புத்தம் புதிய பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

வருகிற ஜூன் 11 முதல் ஞாயிறுதோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனராகவும், நடிகராகவும் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கும் திரு. கரு.பழனியப்பன் தலைமையேற்று தொகுத்து வழங்குகிறார்.

சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் மூச்சாய், பொதுமக்களின் பரவலான பேச்சாய், நேர்மறை எண்ணங்களாய் மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியில் இரு தலைப்புகளை ஏற்று பொதுமக்கள் இரு குழுக்களாக பங்கேற்று விவாதிப்பார்கள். இவ்விரு குழுக்களின் விவாதங்களின் நாயகமாக, நடுநிலையான கருத்துக்களுடன் கரு.பழனியப்பன் இந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளை விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *