velankanniகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா நடைபெறுவது உண்டு. இதன்படி இவ்வருடம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னையை வழிபட்டுச் செல்வர்.

இந்த திருவிழாவுக்கு வட மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதியை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 26, 28 ஆகிய தேதிகளில் இருந்து மும்பை லோகமான்ய திலக் ரெயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் புறப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில் 28, 30 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து லோகமான்ய திலக் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் புறப்பட்டுச் செல்லும். இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று இருந்து தொடங்குகிறது. ஏற்கனவே, மும்பையின் பந்த்ரா ரெயில் நிலையத்தில் இருந்து இரண்டு சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வருகிற 14-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு அன்றைய தினம் இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்காக பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் வசதிக்காக மதுரையில் இருந்து காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

English Summary:Velankanni Festivel: Special Train From Mumbai.