கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, அக்டோபர் 23-ந் தேதி திங்களன்று, காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், பிற்பகல் 1.30 மணிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சேத்தன், பவானி ஸ்ரீ, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை வாரிக்குவித்த “விடுதலை பாகம் 1” புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
அக்டோபர் 24-ந் தேதி செவ்வாயன்று, பிற்பகல் 1.30 மணிக்கு கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், சிரக் ஜனி, ஹரீஸ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் “அகிலன்” ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.