மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் உத்தரவாதம் இல்லாத குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் நாம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்ற ஒரு இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது.இந்தத் திட்டத்தின் மூலம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் வரை விவசாயிகள் கடன் பெறலாம் மேலும் இதற்கு 18 வயது முதல் 75 வயது உடைய நபர்கள் தகுதியானவர்கள் என்றும் அறிவித்திருக்கிறது.

விண்ணப்பிப்பது எப்படி

இதனை விவசாயிகள் வங்கி மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பின்னர் சம்பந்தப்பட்ட வங்கியில் அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை நீங்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் அதாவது உங்களுக்கு விருப்பமான வங்கியை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

பிறகு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தவுடன் வங்கி அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

நிலத்தின் ஆவணம் நகலெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டை, பேன் கார்டு, 100 நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் உங்களுடைய போட்டோவை சேர்த்து கொடுக்க வேண்டும்.

இது அனைத்தையும் பூர்த்தி செய்தவுடன் உங்களுக்கான மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு உங்களுடைய வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *