தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 14ஆம் தேதி முதல் அவர்கள் படித்த பள்ளியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தன. 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும் இந்த மதிப்பெண் பட்டியலை வைத்து மாணவர்கள், கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த மதிப்பெண் பட்டியலை மாணவர்களே இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் இன்று முதல் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரில் இருந்து அவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த மதிப்பெண் சான்றிதழ் உதவியால் மாணவர்கள் தாங்கள் அடுத்து சேரவுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு விரைவில் நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

English Summary: +2 Mark Sheets can be downloaded through Internet from Today.