சிறப்பு பட்டிமன்றம் (ஆயுதபூஜை 04-10-2022)

ஜெயா டிவியில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக சொல்லின் செல்வர் திரு.பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகவுள்ளது. “வாழ்வில் என்றும் வெற்றியைத் தருவது சத்தியமா, சாமர்த்தியமா” என்ற தலைப்பில் நடக்கும் இப்பட்டிமன்றத்தில் சத்தியமே என்ற அணியில் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், திருமதி.நித்திய ப்ரியா, இராஜபாளையம் உமாசங்கர் ஆகியோரும், சாமர்த்தியமே என்ற அணியில் திரு.அண்ணா சிங்காரவேலு, ஆர்ஜே நர்மதா, திரு.தாமல் சரவணன் ஆகியோரும் பங்கேற்று சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியை வரும் செவ்வாய்கிழமை ஆயுத பூஜையன்று காலை 10:00 மணிக்கு காணலாம்.

சிரிப்பு மன்றம் (விஜயதசமி 05-10-2022)

ஜெயா டிவியில் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல நகைச்சுவை பேச்சாளர் புலவர்.திரு.சண்முக வடிவேல் தலைமையில் ‘சிரிப்பு மன்றம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியில் திரு.சிவகுருநாதன், திரு.நீலகண்டன், திரு.அன்பழகன், திருமதி.வேதநாயகி ஆகியோர் பங்கேற்று நம் வாழ்வில் பல்வேறு சூழல்களில் அன்றாட நடக்கும் நகைச்சுவைகளை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும் விதத்தில் தொகுத்து வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியை வரும் புதன்கிழமை விஜயதசமி திருநாளன்று காலை 10:00 மணிக்கு காணலாம்.

“அன்பே சிவா”

கல்லூரி பெண்களுடன் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா பங்குபெறும் கலகலப்பான உரையாடல் மற்றும் கல்லூரி பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கென பாணியில் குரும்புத்தனமான பதில் அளிக்கிறார் .மேலும் சக நடிகர்களுடன் படப்பிடிப்பில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களையும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஆயுத பூஜை அன்று காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ப்ரீத்தி தொகுத்து வழங்குகிறார்.

“சிறப்பு தேன் கிண்ணம்”

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி முன்னிட்டு பாடகர் ஹரி சரண் தொகுத்து வழங்கும் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் பங்கு பெறுகிறார். இதில் அவர் தனது இசை பயணத்தை பற்றியும், கடந்து வந்த பாதையை பற்றியும் நெகிழ்ச்சியுடன் நேயர்களுக்கு விருந்தாக அமையும் இந்நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அன்று காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

“குரு சிஷ்யன்”

ஜெயா டிவியில் விஜயதசமியன்று மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘குரு சிஷ்யன்’ இந்த நிகழ்ச்சியில் கலை உலகத்தில் ஜாம்பவானாக திகழுகின்ற இயக்குநர் விக்ரமன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் சேரன், இயக்குநர் சிம்புதேவன் முதலியவர்கள் அவர்களோட குரு-வை பத்தியும், அவங்க குருக்கிட்ட இருந்து தெரிஞ்சுகிட்ட பல விஷயங்கள பத்தியும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.

மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க இந்த வரிசையில தெய்வத்துக்கும் முன்னாடி குருவதா வச்சு பார்க்குறோம். அதுக்கேத்த மாதிரி நம்ம குரு சிஷ்யன் ஷோ வுல இயக்குநர்கள் அவங்களோட கலையுலக குருநாதர்களுக்கு நன்றி செலுத்துற விதமா அமைந்துள்ளது தான் “குரு சிஷ்யன்” நிகழ்ச்சி காணத்தவறாதீர்கள்……

“ஒரு கை பார்ப்போம்”

ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் ஜெயா டிவி செய்தி வாசிப்பவர்கள் பங்குபெறும் ஒரு கலகலப்பான நிகழ்ச்சி “ஒரு கை பார்ப்போம்”. விஜயதசமி அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் சிறப்பு அம்சம் மொத்த நிகழ்ச்சியும் ஒரு கையால் மட்டும் விளையாடப்படும் இந்த நிகழ்ச்சி இன்றைய இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்கு புதுவிதமான அனுபவங்களை கொடுக்கும் இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் சரவணன் தொகுத்து வழங்குகிறார் .

மேலும் இந்த நிகழ்ச்சியில் மெருகேற்றும் விதமாக குக்கூ என்ற சமையல் பகுதியை செஃப் சுஜா மற்றும் செஃப் தீனா பங்கு பெற்று தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் .

“அனுபவம் புதுமை”

ஜெயா டிவியில் விஜயதசமி அன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு கலகலப்பான ஒரு ஜாலி நிகழ்ச்சி “அனுபவம் புதுமை”. இதில் கோமல் சர்மா மற்றும் ஷனம் ஷெட்டி பங்கு பெற்று தங்கள் வாழ்க்கையில் நடந்த, நடக்க போற அனுபவங்களை வித்தியாசமாக பகிரும் இந்நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார்.

“ஜாலி ஓ ஜிம்கானா”

ஜெயா டிவியில் வரும் விஜய தசமி புதன் 05/10/2022 அன்று இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘ஜாலி ஓ ஜிம்கானா’. இந்த நிகழ்ச்சியானது தமிழகத்தின் திறமையான பெண் ஸ்டாண்டப் காமெடியன்கள், ஜெயா மேக்ஸ் இளம் தொகுப்பாளர்கள் மற்றும் காலங்களில் அவள் வசந்தம் திரைப்பட குழுவினர்கள் கலந்து கொண்டு கலகலப்பாக கொண்டு செல்லும் காமெடி நிகழ்ச்சி ‘ஜாலி ஓ ஜிம்கானா’. இந்த நிகழ்ச்சியில் ஸ்டாண்டப் காமெடியன் அன்னபாரதி, கல்பாக்கம் காயத்திரி, நீலவேணி மற்றும் பகவதி கலந்து கொண்டு தங்களுடைய காமெடி திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *