ரயில் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் Rail Drishti என்ற புதிய இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார்.
இதன் மூலம் ரயிலில் வழங்கப்படும் உணவுகள், தயாரிக்கும் சமையலறைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அமர்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல், ரயில் இயங்கி கொண்டிருக்கும் போதே, எந்த இடத்தில் கிராஸ் செய்கிறோம், அடுத்து எந்த இடத்தில் நிறுத்தம் எவ்வளவு நேரம் நிறுத்தம் உள்ளிட்ட விவரங்களும் தெரிந்துகொள்ளலாம்.