14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால் தடையை மீறி சில இடங்களில் குழந்தைகள் வேலை செய்கின்றனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் 4.19இலட்சம் இருந்துள்ளனர். அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையின் காரணமாக அந்த கணக்கு 29,656 குழந்தைகளாக குறைந்தது.
ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பில், தமிழகத்தில் 1.51இலட்சம் குழந்தைகள் முழு நேர தொழிலாளர்களாகவும், 1.32இலட்சம் குழந்தைகள் பகுதி நேர தொழிலாளர்களாகவும் வேலை செய்துகொண்டிருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.
இதை தவிர்க்க தமிழக அரசு நவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆய்வாளர்கள் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள் உதவி மையத்திற்கு வரும் புகார்கள் அனைத்திற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது.
English Summary: Number of child labors in Tamilnadu is increased.