பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 27ஆம் தேதி கடைசி தேதி என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிரிண்ட் வடிவில் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்களை கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மாணவர்கள் மிகவும் ஆர்வமாக பதிவு செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு கடைசி நாள் மே 24-ம் தேதி என்றும், பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க கடைசி நாள் மே 27-ம் தேதி என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிளஸ் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் நேற்றுதான் பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளதால் வெளியூர் சென்றிருக்கும் மாணவர்களின் வசதிக்காக பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும், அதேபோல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 31-ம் தேதி வரையும், அதேபோல், விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 4-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
English summary : Engineering studies to apply for the extension of the time period.