வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 124.02 புள்ளிகள் உயர்ந்து 29,012.88 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் குறியீட்டு எண் நிப்டி 25.15 புள்ளிகள் உயர்ந்து 8,754.65 புள்ளிகளிலும் உள்ளன. கச்சா எண்ணெய் விலை சரிவு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை அடைந்தன.