பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகஊடகங்களுக்கு செக் வைக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருகிறது. புதிய திருத்தங்களின் படி நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி கருதி வதந்திகளை கண்காணித்து 24 மணிநேரத்திற்குள் நீக்குவது வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் நிறுவனத்தின் கடமையாகும். போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பிய உண்மையான நபரை கண்டுபிடிப்பது அந்நிறுவங்களின் பொறுப்பாகிறது.
வதந்தி செய்திகளை விசாரணைக்காக 180 நாட்கள் வரை அழிக்காமல் சமூக வலைத்தளங்கள் பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பான அரசு முகமைகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது கட்டாயமாகிறது. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் இதுதொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.