டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,199 காலியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்கூட்டுறவு அலுவலர், சமூக பாதுகாப்பு நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்- பதிவாளர், நகராட்சி ஆணையர் (கிரேடு-2), உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங் களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 23 விதமான பதவிகளில் 1,199 காலியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி குருப்-2 தேர்வுக்கான (நேர்காணல் பதவிகள்) அறி விப்பை வெளியிட்டது.

இதற்கான ஆன்லைன் பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது.

குரூப்-2 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி இளங்கலை பட்டப் படிப்பு என்ற போதிலும் முதுகலை பட்டதாரி களும் எம்பில்., முடித்தவர்களும் பிஇ, பிடெக் பட்டதாரிகளும் அதிக எண்ணிக்கையில் விண்ணப் பித்தனர். ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. குரூப்-2 தேர்வுக்கு 6 லட்சத்து 41,119 பேர் ஆன்லைனில் விண்ணப் பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி செய லாளர் கே.நந்தகுமார் தெரிவித்தார்.

நவம்பர் 11-ல் எழுத்துத் தேர்வு: முதல்கட்ட தேர்வான முதல் நிலைத் தேர்வு நவம்பர் மாதம் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அத்தேர்வில் பொது அறிவு மற்றும் மொழித்தாள் (தமிழ் அல்லது ஆங்கிலம்) ஆகிய 2 பகுதிகளில் இருந்து தலா 100 கேள்விகள் வீதம் 200 வினாக்கள் “அப்ஜெக்டிவ்” முறையில் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாக முதன்மை எழுத்துத்தேர்வு நடத்தப் படும். “ஒரு காலியிடத்துக்கு 10 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத்தேர்வில் இருந்து முதன்மை தேர்வுக்கு விண்ணப் பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். முதன்மைத் தேர்வானது விரிவாக பதில் எழுதும் வகையில் அமைந் திருக்கும். அத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்காணல் நடத்தப்படும்.

கலந்தாய்வு மூலமாக: இதைத்தொடர்ந்து, முதன்மைத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகிய வற்றின் அடிப்படையில் பணிநிய மனம் நடைபெறும். கலந்தாய்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான பதவியை தேர்வுசெய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.முதன்மைத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநிய மனம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *