தமிழகத்தில் வீடு வாடகைக்கு எடுக்க விரும்புவோர் பெரும்பாலும் புரோக்கர்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு பார்ப்பது என்பது மிகவும் கடினமான பணி. எனவே புரோக்கர்களின் கை சென்னையில் ஓங்கியுள்ளது. ஒரு மாத வாடகை அவர்களுக்கு புரோக்கர் கமிஷனாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் நடுத்தர வர்க்க மக்கள் சென்னையில் வீடு பார்க்க கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாடகைக்கு பார்ப்பவர்களின் வசதிக்காக நோபுரோக்கர் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் இலவச சேவையை பயனபடுத்திக் கொள்ளாம் என்று நோபுரோக்கர்.காம் இணையத் தளச்சேவையின் மூத்த செயல் தலைவர் அமித்குமார் அகர்வால் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நகரங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் வேலைக்கு சேருகிறவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் கடினமாக உள்ளது. குறிப்பாக வாடகைக்கு வீடு பிடித்து தரும் இடைத்தரகர்கள் அதிக அளவு பணம் பறித்து விடுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு நோபுரோக்கர்.காம் இணையதளச் சேவையை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் இலவசமாக வாடகைக்கு வீடு, அறை பிடிக்க முடியும். இந்த இணையதளத்தின் சேவையை 9 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் 9 முறைக்கு பிறகு வாடகைக்கு வீடு பிடித்துத் தர குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 4 லட்சம் பேரும் இலவசமாக வீடு, அறை பிடித்து கொடுத்ததன் மூலம் ரூ. 100 கோடி அளவிலான இடைத்தரகு பணம் மிச்சமாகியுள்ளது அவர் தெரிவித்துள்ளார்.
English Summary: Rental house without brokerage commissions to search for a free website