பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியான நிலையில் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வர்ககளின் மதிப்பெண் விவரங்களை அன்றே இணையதளத்தின் மூலம் அறிந்து கொண்டனர். இந்நிலையில் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் விரைவில் வினியோகம் அரசு தேர்வு துறை மூலமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளம் வழியாக நேற்று முன் தினம் முதல் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் இன்று (21-ந்தேதி) முதல் தற்காலிக சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு, மாநகராட்சி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் தலைமை ஆசிரியர்கள் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் கையெழுத்து மற்றும் முத்திரையுடன் தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவ-மாணவிகள் பெற்று சென்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 410 மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற 46,678 பேரும் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று சென்றனர். இந்த தற்காலிக சான்றிதழின் உதவியுடன் மாணவர்கள் உயர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் சேரும் போது ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 60 நாட்களுக்கு மட்டும் தகுதி உடையதாக பயன்படுத்தப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், ‘இன்ஷியல்’, பிறந்த தேதி ஏதேனும் தவறாக அச்சிடப்பட்டு இருந்தால் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு உரிய சான்றுடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அதனை பள்ளிகள் அரசு தேர்வு துறைக்கு தெரிவித்து பிழை திருத்தம் செய்து ஒரிஜினல் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
English Summary : Temporary mark sheet for +2 students issued from today.