வண்டலுார் பூங்காவில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து, பூங்கா பாதுகாவலர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில், காலை 7:௦௦ மணி முதல், மாலை 6:௦௦ மணி வரை நுழைவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல் துறையினர் சாதாரண உடையில் கண்காணிப்பு செய்ய உள்ளனர்.
- பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்கும் வகையில் பார்வையாளர்கள் கொண்டு வரும் நொறுக்கு தீனிகள் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
- வாகனங்களை நிறுத்த கூடுதல் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
- 30க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் குழாய்களில் குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி மாணவர்கள் உள்ளிட்டோர் போலீசாருக்கு உதவிடும் வகையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.