ரெயில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த வைஃபை வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக வைஃபை இன்டர்நெட் வசதி கடந்த சில மாதங்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரை மணி நேரம் வரை இலவசமாக இன்டர்நெட்டை பயணிகள் பயன்படுத்த முடியும். அதன்பின்னர் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் ஏராளமான பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைபை வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிவேக வைபை வசதிக்கான பணிகளை ரெயில்டெல் காப்பரேசன் நிறுவனம் மேற்கொண்டு வருவதால், இன்று முதல் வைஃபை சேவை நிறுத்தப்படுவதாகவும் அதிவேக வைஃபை பணிகள் முடிவடைந்ததும் ஜூலை 14 முதல் மீண்டும் இந்த சேவை செயல்படத் தொடங்கும் என்றும் ரெயில்வே துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Wi-Fi service at the Chennai Central railway station, why stop?